Author Topic: ~ இறால் சம்பால் (துவையல்) ~  (Read 388 times)

Online MysteRy

இறால் சம்பால் (துவையல்)

ஆற்று இறால் – 15
தேங்காய் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 5
புளி – சிறிய எலுமிச்சை அளவு
நாட்டு வெங்காயம் – 3
உப்பு – 6 சிட்டிகை
 இறாலை சுத்தம் செய்தபிறகு 2 சிட்டிகை உப்பு போட்டு பிரட்டி (எண்ணெய் இல்லாமல்) வெறும் வாணலியில் போட்டு வதக்கவும்.
வெந்து கலர் மாறியவுடன் சற்று ஆறவைத்து, அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், புளி, மீதி உப்பு சேர்த்து அரைக்கவும்.
சற்று கொரகொரப்பாக இருக்கும்போது நாட்டு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.