Author Topic: ~ டேட்ஸ் கொப்பரை உருண்டை! ~  (Read 491 times)

Online MysteRy

டேட்ஸ் கொப்பரை உருண்டை!



தேவையானவை:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - சில துளி, நெய் - அரை தேக்கரண்டி.

செய்முறை:
பேரீச்சம் பழத்தில் சரிபாதி எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும் (நைசாக அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை தேக்கரண்டி நெய்யை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்) உருண்டைகளாகப் பிடிக்கவும். கிராண்டான டேட்ஸ் - கொப்பரை உருண்டை அதிக செலவின்றி வீட்டிலேயே தயார்!