Author Topic: ~ பூசணிக்காய் தயிர் சட்னி! ~  (Read 394 times)

Online MysteRy

பூசணிக்காய் தயிர் சட்னி!



தேவையானவை:
வேக வைத்து மசித்த மஞ்சள் பூசணி - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கொத்தமல்லி - தாளிக்க தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

அரைக்க:
கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் மூடி, பச்சை மிளகாய் - ஒன்று.

செய்முறை:
தயிரைக் கடைந்து உப்பு, மசித்த பூசணியை சேர்க்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தாளித்து சேர்க்கவும்.