Author Topic: ~ எடை குறைய பாட்டி வைத்தியம் :- ~  (Read 499 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எடை குறைய பாட்டி வைத்தியம் :-




பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.


காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.


நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.


முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.


வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.