உன் கொத்து மயிர் கற்றைகளினில் இடையே
இழைந்து இருக்கும் சீயக்காயின் வாசம் ...
சந்தனம் ,குங்குமம்,ஒட்டுப்பொட்டு
என அத்தனைக்கும் ஆயுட்தடையிட்டு
அன்பை பதிந்து பகிர என் இதழ்கள் ஒற்றிடவே
வெற்றிடமாய் வைத்திருக்கும் பரந்த நெற்றி ..
காந்தமும் , சாந்தமும் சரிசமக்கலவையாய்
எனை பார்க்கும்பொழுதுகளில் பீய்ச்சியே பாய்ச்சிடும்
பாவையின் பார்வைகளை பிரசவிக்கும்
மின்சார கண்கள் .....
தரத்திலும் , மதிப்பிலும் ,பாக்கும்,தேக்குமே
தோற்க்கும் படியான நின் மூக்கு
அம் மூக்கின் வனப்பையும், வசீகரத்தையும்
வரிவரியாய் வரிசைபடுத்தி வர்ணிக்கப்படுவதில்
வார்த்தைகளுக்குள் வாக்குவாதம் தொடங்கி
வன்முறையே வெடித்ததனால் ..
தற்காலிக தடங்கலுக்கு வருந்துகிறேன் ....!
இனிமையதன் பிறப்பிடமாய் உன் இரு இதழ்களின்
இணைப்பினில் இனிதாய் பிறந்திடும் இனிப்பு ...
மென்பட்டே தோற்று, பாழ்பாழாய் பட்டுபோய்விடும்
உன் பட்டு விரல்களின் பஞ்சு ஸ்பரிசம் ...
என் இரும்பு இதயத்தின் இறுக்கம் இறக்கிடவேண்டி
வேசமாய் வெளிப்படும் உன் வசீகர விசும்பல்கள்..
உன் ஆத்திர குதிரைகளுக்கு கடிவாளமாகவும்
அசதியை அழித்திடும் அசாத்திய ஆசுவாசம்தனை
ஆசுவாசமாய் உள்ளிழுத்து வெளியனுப்பும்
வசியக்காற்றின் வசியம் செய்யும் வாசம் .