Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 15/01/2014 (Jan 15th)  (Read 2723 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
இன்றைய ராசி பலன்கள் - 15/01/2014 (Jan 15th)

  மேஷம் :

குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்


ரிஷபம் :

இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்


மிதுனம் :

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு


கடகம் :

குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை


சிம்மம் :

திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா


கன்னி :

மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்


துலாம் :

வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்


விருச்சிகம் :

சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்


தனுசு :

இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே


மகரம் :

தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை


கும்பம் :

மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்


மீனம் :

சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை