Author Topic: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~  (Read 3685 times)

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #15 on: January 14, 2014, 09:53:25 PM »
பழப் பச்சடி



தேவையானவை:
ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும்  சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.
சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #16 on: January 14, 2014, 10:02:34 PM »
தினை உருண்டை



தேவையானவை:
தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:
தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
நார்ச்சத்து மிகுந்த உணவு இது.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #17 on: January 14, 2014, 10:08:38 PM »
காய்கறி பர்கர்



தேவையானவை:
பர்கர் பன் - 2 (பேக்கரியில் கேட்டு வாங்கிக் கொள்ள வும்), குடமிளகாய், தக்காளி -  தலா ஒன்று, பெரிய வெங்காயம் - 2, கறுப்பு, வெள்ளை எள் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - இஞ்சி - பச்சை மிளகாய் - உப்பு சேர்த்து அரைத்த சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பன்னை இரண்டாக நறுக்கவும். ஒருபுறம் வெண்ணெய், மறுபுறம் அரை டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி சட்னி தடவவும் (உட்புறத்தில்). அதன் நடுவே பொடியாக நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். பன்னை மூடவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கறுப்பு, வெள்ளை எள் தூவி பரிமாறவும். மற்றொரு பன்னையும் இதேபோல் செய்யவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #18 on: January 14, 2014, 10:12:36 PM »
உலர்பழம் - கோதுமை ரொட்டி அடுக்கு



தேவையானவை:
கோதுமை பிரெட் - 3 ஸ்லைஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தேவையான அளவு, நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஒரு பிரெட் ஸ்லை ஸில்... செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும். 3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன் றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #19 on: January 14, 2014, 10:20:07 PM »
பப்பாளிப்பழக் கூழ்



தேவையானவை:
பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #20 on: January 14, 2014, 10:23:50 PM »
ஊட்டச்சத்து பழ பானம்



தேவையானவை:
 தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, டைமண்ட் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.
வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #21 on: January 14, 2014, 10:30:22 PM »
வேர்க்கடலை - பேபிகார்ன் புரட்டல்



தேவையானவை:
 பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #22 on: January 14, 2014, 10:36:49 PM »
சிவப்பு அவல் - காய்கறி பிரியாணி



தேவையானவை:
சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #23 on: January 14, 2014, 10:39:36 PM »
கோதுமைப் பால்



தேவையானவை:
முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:
முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #24 on: January 14, 2014, 11:16:31 PM »
ஓட்ஸ் அவியல்



தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6 பச்சை திராட்சை - 15, மாதுளை முத்துகள் - கால் கப், தயிர் - ஒரு கப், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இதை பாதி தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரியுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர்  விட்டு அரைக்கவும். இதை ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்து, மீதி தயிரையும் சேர்த்துக் கலந்து வைக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து, கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு, சாப்பிடக் கொடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #25 on: January 15, 2014, 12:01:22 PM »
கலர்ஃபுல் அவல் உப்புமா



தேவையானவை:
அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
தேங்காய் துருவல், பனீர் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.
விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் - பனீர் அவல், அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் அவல் உப்புமா ரெடி.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #26 on: January 15, 2014, 12:03:46 PM »
சௌசௌ தயிர் பச்சடி



தேவையானவை:
தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #27 on: January 15, 2014, 12:06:07 PM »
காய்கறி ஊறுகாய்



தேவையானவை:
மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.
இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #28 on: January 15, 2014, 12:08:02 PM »
பழ லஸ்ஸி



தேவையானவை:
தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:
கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை அடுப்பில்லாத சமையல்! ~
« Reply #29 on: January 15, 2014, 12:09:29 PM »
பச்சை வேர்க்கடலை துவையல்



தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.