Author Topic: ~ வேப்பம் பூ மருத்துவம்:- ~  (Read 590 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227449
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம் பூ மருத்துவம்:-




வயிற்றில் பூச்சியா? வேப்பம் பூ வயிற்றுக்கு தீங்கின்றி குடலிலுள்ள மலக்கிருமிகளை ஒழிக்கும்.

சிறுவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்த வேப்பம்பூ கஷாயம் குடிக்க கொடுக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்க நாள்தோறும் வேப்பம்பூவை ஊற வைத்த நீரை அருந்தினால் உடல் பருமன் குறையும்.

காதில் சீழ் வடிந்தால் நல்ல கொதி நீரில் வேப்பம் பூவைப் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காதில் படும்படி பிடித்தால் சீழ் வடிதல் குணமாகும்.

தொண்டை புண்ணாக இருந்தால் வேப்பம் பூ சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.

வாந்தி வரும் உணர்வா? அடிக்கடி ஏப்பமா? வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தியும், ஏப்பமும் தரும் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வேப்பம் பூ ஜீரண சக்தியை அதிகரிக்கும் உடல் வெப்பத்தை ஏற்படுத்தும் பித்தத்தை குணப்படுத்தும்.

கண் பார்வை பளிச்சென்று தெரிய உலர்ந்த பூவை நன்கு அரைத்து சமஅளவு வெடியுப்புடன் கலந்து காற்றுப் புகா குப்பியில் வைத்து வேண்டும்போது எடுத்துக் கண்களில் தீட்டி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.