என்னென்ன தேவை?
சத்து மாவு
வறுத்த எள்
மிளகாய் வற்றல்,
தேங்காய் துண்டுகள்
உப்பு- தேவையான அளவு,
எப்படிச் செய்வது?
அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்துக் கொதிக்கும் போது 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பை அணைக்கவும். லேசாக ஆறியதும், அதில் சத்து மாவைக் கொட்டிக் கிண்ட வேண்டும். எண்ணெயில் வறுத்த எள், மிளகாய் வற்றல், தேங்காய் துண்டுகள் சேர்த்து உப்பும் சேர்த்து மாவில் கொட்டிக் கலந்து, கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.