Author Topic: ~ சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்,வெள்ளை வெங்காயம் : மருத்துவ குணங்கள்! ~  (Read 579 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்,வெள்ளை வெங்காயம் : மருத்துவ குணங்கள்!




வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம் என்று ஒன்றும் இருக்கு.

இவைகள் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தாள் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று , வெந்நீர் குடித்தால் … ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்றுவிடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும்.

நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடித்தால் , உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது… முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் … ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோயால் அவதிப்படுறவங்க சாப்பாட்டில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வைத்துகொண்டால் … பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் என்று அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப… ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்த்து குளிக்கணும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாசத்துக்கு இப்படி செய்தால் … தலைமேல் பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காமல் இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் … காலப்போக்கில் முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்