Author Topic: ~ நெல்லிக்காய் சூப்: ~  (Read 423 times)

Online MysteRy

~ நெல்லிக்காய் சூப்: ~
« on: January 07, 2014, 02:16:06 PM »
நெல்லிக்காய் சூப்:



தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

நெல்லிக்காயை வேக வைத்த தண்ணீர் – 4 கப்
கார்ன் ப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை என்பது சில நம்பிக்கையாளர்களின் கருத்து. இது உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.