Author Topic: ~ 30 வகை கிராமிய சமையல்! ~  (Read 4264 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #15 on: January 04, 2014, 02:30:03 PM »
அரிசி  உளுந்து கஞ்சி



தேவையானவை:
புழுங்கல் அரிசி நொய் - ஒரு கப், கறுப்பு உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, சீரகம் - 2 டீஸ்பூன், பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மோர் - தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 கப் நீர் சேர்த்து... கறுப்பு உளுந்து, சீரகம், வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #16 on: January 04, 2014, 02:31:41 PM »
கொள்ளு பொடி



தேவையானவை:
கொள்ளு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, கொப்பரைத் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும். கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்க வும். வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால்... அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #17 on: January 04, 2014, 02:33:12 PM »
வாழைக்காய்  சின்ன வெங்காயம் கறி



தேவையானவை:
முற்றிய வாழைக் காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 12, பூண்டு - 8 பல், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று, தேங் காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, பெருஞ்சீரகத்தை சேர்த்து மையாக அரைக்கவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி... வாழைக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து... அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #18 on: January 04, 2014, 02:35:13 PM »
மிளகாய் வடை



தேவையானவை:
சிவப்பரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, பூண்டு - 6 பல் (விழுதாக அரைக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்க வும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, அரிசி - பருப்பு டன் பட்டை, லவங்கம், காய்ந்த மிள காய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மாவை வழித்தெடுக்கும் முன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங் காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

குறிப்பு:
இதை வேறொரு முறையிலும் செய்யலாம். மாவை சற்று தளர்வாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை ஒரு சின்னக் குழி கரண்டியில் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து, ஒரு ஜல்லிக்கரண்டி மேல் வைத்து அதன் மீது தோசைத் திருப்பி கொண்டு அழுத்தி எடுத்து சுடச்சுட சாப்பிட்டால்... சுவை ஆளை அசத்தும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #19 on: January 04, 2014, 02:36:33 PM »
வாழைத்தண்டு  பச்சை வேர்க்கடலை கூட்டு



தேவையானவை:
வாழைத்தண்டு - ஒரு துண்டு, பாசிப்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நெய், பால் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து... நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #20 on: January 04, 2014, 03:50:14 PM »
மணத்தக்காளி சாறு



தேவையானவை:
 மணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 4, பச்சை மிளகாய் - ஒன்று, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், எண் ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும், மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து நன்கு வதக்கி... அரிசி கழுவிய நீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்கு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #21 on: January 04, 2014, 03:52:08 PM »
கொள்ளு இனிப்பு உருண்டை



தேவையானவை:
 கொள்ளு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து... பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #22 on: January 04, 2014, 03:54:50 PM »
கம்பு மாவு தோசை



தேவையானவை:
கம்பு மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, மறுநாள் சற்று கனமான தோசைகளாக வார்க்கவும் (தோசை வார்ப்பதற்கு முன் கரைத்த மாவில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிள காயை சேர்த்துக் கொள்ளலாம்).
இதற்கு தொட்டுக் கொள்ள காரச்சட்னி ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #23 on: January 04, 2014, 04:05:56 PM »
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்



தேவையானவை:
மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கப், தோசை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #24 on: January 04, 2014, 04:09:35 PM »
பூண்டு பொடி



தேவையானவை:
நாட்டுப் பூண்டு - சுமார் 50 பல் (தோல் நீக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - 4 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும். பிறகு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். வாணலியில் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் புளியை சற்று மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுக் கவும்.
வறுக்கப்பட்ட அனைத் துப் பொருட்களும் ஆறிய தும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து நைஸாக அரைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #25 on: January 04, 2014, 04:11:49 PM »
சீராளம்



தேவையானவை:
பச்சைப்பயறு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய் துருவல் - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
 பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து...  உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். மாவை இட்லித் தட்டில் வேக வைத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #26 on: January 04, 2014, 04:13:45 PM »
கீழாநெல்லி கீரை மசியல்



தேவையானவை:
கீழாநெல்லி கீரை- ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 கீழாநெல்லி கீரையை நீரில் நன்கு அலசி, இலைகளை உருவிக் கொள்ளவும். இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். மண்சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிது நெய் விட்டு உருக்கியதும், வேக வைத்த கீரை, உப்பு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
கீழாநெல்லி கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். மஞ்சள்காமாலை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #27 on: January 04, 2014, 04:15:30 PM »
வெண்ணெய் புட்டு



தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - 200 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து... நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இளம் பாகாகக் காய்ச்சவும். வெல்லப் பாகில் பாலை ஊற்றி, கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சற்றே வெந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும்.
ஒரு பெரிய தட்டு எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி, செய்து வைத்திருக்கும் கலவையை அதில் போடவும். ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #28 on: January 04, 2014, 04:17:13 PM »
சிம்ளி



தேவையானவை:
கேழ் வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், வேர்க்கடலை - கால் கப், எள் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில்  லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை - எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #29 on: January 04, 2014, 04:19:51 PM »
பச்சப்புளி



தேவையானவை:
புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4,  சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். மிளகாயை அடுப்பில் வைத்து சுட்டு (கருகாமல்), புளி கரைசலில் சேர்த்து நன்கு பிசைந்து மிளகாய் சக்கையை எடுத்து விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சூடான சாதத்தில் இதனை ஊற்றி சாப்பிட்டால்.. அசத்தலான சுவையில் இருக்கும்.