Author Topic: மேங்கோ சூஃப்லே  (Read 423 times)

Offline kanmani

மேங்கோ சூஃப்லே
« on: January 02, 2014, 08:58:11 PM »
என்னென்ன தேவை?

மாம்பழத்துண்டுகள் - 1 கப்,
மாம்பழச்சாறு - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப்,
சோள மாவு - 4 டீஸ்பூன்,
மேங்கோ எசென்ஸ் - 5 துளிகள்,
ஜெலட்டின் - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - கால் கப்,
ஃபிரெஷ் கிரீம் மற்றும் மாம்பழத் துண்டுகள் - அலங்கரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?

பாலை சூடாக்கவும். சர்க்கரையை பாலில் கொட்டிக் கொதிக்க விடவும். சோளமாவில் தண்ணீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து அதை பாலில் ஊற்றி  கலந்து வைக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீர் விட்டுக் கரைத்து டபுள் பாயில் (ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கலவை உள்ள பாத்திரத்தை  அதன் மேல் வைத்துக் கொதிக்கச் செய்வது) செய்து ஆறவைத்து சோளமாவுக் கலவையில் கலந்து மாம்பழச் சாறு, எசென்ஸ் சேர்த்து நன்குக்  கலக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டியானதும் வெளியே எடுத்து ஃபிரெஷ் கிரீம், மாம்பழத் துண்டுகளால்  அலங்கரிக்கவும்.