« on: January 02, 2014, 04:36:57 PM »
பாகற்காய் ரசம்

தேவையானவை:
பாகற்காய் - 100 கிராம், தக்காளி - 200 கிராம், எலுமிச்சம்பழம் - 1, உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை - சிறிதளவு. பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, தனியா - அரை டீஸ்பூன், மிளகு, சீரகம், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை சாறு எடுக்கவும். தக்காளி, பாகற்காயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து, பாகற்காயைப் போட்டுச் சிவக்க வதக்கவும். கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, பொடித்து வைத்த பொடியைச் சேர்த்துக் கிளறவும். வாசம் வந்ததும், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கரையும் வரை வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறைச் சேர்த்து, கொத்துமல்லித்தழை சேர்க்க வேண்டும்.
குறிப்பு:
வாயில்விட்டுப் பார்த்து, எலுமிச்சைச் சாறு போதவில்லை எனில், இன்னும் சிறிது சேர்க்கலாம். லேசான கசப்புடன் இருந்தாலும், உடலுக்கு மிகவும் நல்லது.
பலன்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. கல்லீரலைப் பலப்படுத்தும். மூச்சுப் பாதை அழற்சியைப் போக்கும். மலச்சிக்கலையும் போக்கும். சிறுநீரகக் கல் வருவதைத் தடுக்கும். எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
« Last Edit: January 02, 2014, 04:41:22 PM by MysteRy »

Logged