Author Topic: ~ சுரைக்காய் சப்ஜி ~  (Read 561 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227445
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சுரைக்காய் சப்ஜி ~
« on: January 02, 2014, 04:32:05 PM »
சுரைக்காய் சப்ஜி



தேவையானவை:
சுரைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத் தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
 சுரைக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். இதனுடன், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் தனியாத் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும். குக்கரில் வைத்தால் ஒரு விசில் போதும். வெந்ததும், உப்பு சேர்த்து, கடலை மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வரும்போது இறக்கிவிடவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறிவிடவும். சப்பாத்தி, நான் போன்ற சிற்றுண்டிகளுக்கு சிறந்த சைட் டிஷ் இது.

குறிப்பு: 
 எல்லாக் காய்களிலும் இதே முறையில் சப்ஜி செய்யலாம்.

பலன்கள்:
வயிற்று உப்புசம் நீங்கும். வயிறு மற்றும் குடலில் ஏற்படக் கூடிய நச்சுக்களை முழுமையாக நீக்குவதால், அந்த உறுப்புகளில்  ஏற்படக்கூடிய நோய்களை (குடல் புற்று போன்றவை), வரும் முன்னரே தடுக்கும். சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், தூக்கமின்மை சரியாகும்.