« on: January 01, 2014, 10:14:23 PM »
சுரைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:
நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கெட்டியான மோர் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப. அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப்.
தாளிக்க:
எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
சுரைக்காயை வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு அரைத்து, மோரில் கரைக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்துவைத்துள்ள கலவையை ஊற்றி, வேகவைத்துள்ள சுரைக்காயையும் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கிவிடவும்.
பலன்கள்:

« Last Edit: January 02, 2014, 04:33:11 PM by MysteRy »

Logged