Author Topic: ~ வெண்டைக்காய் முந்திரி பக்கோடா ~  (Read 369 times)

Offline MysteRy

வெண்டைக்காய் முந்திரி பக்கோடா 



தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ, முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 6 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களுடன் வெண்டைக்காயைச் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டுப் பிசிறவும். தேவைப்பட்டால், சிறிதளவு எண்ணெயைக் காயவைத்து, வெண்டைக்காய்க் கலவையில் சேர்த்துப் பிசையலாம். இந்தக் கலவையை, காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்துவிட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பலன்கள்:
சிறந்த ஊட்ட உணவு. மூளை, எலும்பு, பல், தசைகளுக்குச் சிறந்த ஊட்டத்தைத் தரும். குடல், வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும். உடல் பருமன் ஏற்படுத்தாத, கொறிக்கும் உணவு.