Author Topic: மனித மனம்  (Read 5889 times)

Offline RemO

மனித மனம்
« on: November 22, 2011, 09:53:38 AM »

ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் வசித்து வந்தார். அவர் வீட்டருகில் ஏழைக் கூலித்தொழிலாளி ஒருவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். கூலித்தொழிலாளி மகிழ்வுடன் இருப்பதை பார்க்கும் போதெல்லாம் செல்வந்தருக்கு ஆச்சர்யமாக இருக்கும். நம்மிடம் இத்தனை வசதிகள் இருந்தும் நம்மால் அவரைப்போல் மகிழ்வுடன் இருக்க முடியவில்லையே என நினைத்துக் கவலை கொள்வார்.

விடைதேடி குருவிடம் சென்றார் செல்வந்தர். குருவே! இத்தனை செல்வங்கள் இருந்தும் என்னால் அந்த கூலித் தொழிலாளியைப் போல் மகிழ்வாக இருக்க முடியவில்லையே என்ன காரணம்?விடை சொல்லுங்கள் குருவே...என்று வினவினார்.

அதற்கு குரு “பணம்” தான் காரணம் என்று கூறினார். எப்படி குருவே?என்று மேலும் தன் சந்தேகத்தை குருவிடம் கேட்டார் செல்வந்தர்.

”என்னுடன் வா சொல்கிறேன் என்றார் குரு”.இருவரும் நடந்தனர். இரவு நேரம் வந்தது. உன்னிடம் இருக்கும் 9000ரூபாயை கொடு என்றார் குரு. அப்படியே ஆகட்டும் குருவே என்றார் செல்வந்தர்.

குரு பணத்தை வாங்கி ஒரு பையில் போட்டு கட்டி கூலித்தொழிலாளியின் வீட்டில் அந்த பணப்பையை போட்டார்.

குருவும்,செல்வந்தரும் வீட்டிற்கு திரும்பினர்.
மறுநாள் கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு குருவும்,செல்வந்தரும் சென்று விசாரித்தனர். பணப்பை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சிதானே என்று கூலித்தொழிலாளியிடம் கேட்டார் குரு.

இல்லை குருவே!!! 10000 ரூபாய் இருந்தால் தங்கநகை வாங்கலாம்.அதற்கு இன்னும் 1000ரூபாய் சேர்க்க வேண்டும். நாங்கள் மாதா மாதம் சம்பாதிப்பது எங்கள் வயிற்றுக்குத்தான் சரியாக இருக்கும்.இம்மாதம் 1000ரூபாய் அதிகமாக சம்பாதிக்க வேண்டி இருப்பதால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என வருத்தத்துடன் கூறினான் கூலித்தொழிலாளி.

குரு செல்வந்தரை பார்த்து “உன் சந்தேகம் தீர்ந்ததா” என்றார்.ஆம் குருவே என்று விடை கிடைத்ததில் நிம்மதியுடன் சென்றார் செல்வந்தர்.

கதையின் நீதி:

மற்றவருடன் ஒப்பிட்டு பார்த்து வாழ்வதிலேயே நாம் குறியாக இருக்கிறோம். பைக்,கார்,வீடு வாங்குவது என் ஆரம்பித்து இதற்கு எல்லையே இல்லாமல்தான் பட்டியல் சென்று கொண்டிருக்கும். நம்மை விட செல்வந்தராக இருக்கும் யாரோ ஒருவரை மிஞ்சவே தினமும் போராடுகிறோம். இந்த செல்வந்தரை வீழ்த்தும் பட்டியல் பில் கேட்ஸ் வரை சென்றாலும் செல்லலாம். இதனாலையே என்னவோ? தன்னிடம் இருக்கும் செல்வத்தை சிறிதும் ஏழைகளிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை இந்த பணக்காரர்கள். ஏழைகளுக்கு உதவினால் தன் செல்வம் சிறிது குறைந்தாலும் தனக்கு ஒருபடி மேல் உள்ள செல்வந்தரை வீழ்த்தமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம்.

5 மார்க் எடுத்து ஃபெயிலா போனவன் எப்பவும் கவலை படுவதில்லை.34 மார்க எடுத்து ஃபெயிலா போனவன் தான் கவலையில் இருப்பான்.

இதைவிட பெரிய கொடும என்னனா? இந்த படிப்பாளிகள் அதாங்க 1ரேங்க்,2ரேங்க எடுப்பாய்ங்களே !!! இந்த படிப்பாளி கூட்டங்கள் ஒரு தடவ 4வது ரேங்கோ 5வது ரேங்கோ எடுத்துட்டா போதும்.இவங்க படுற கவலை இருக்கே!!!!!!!!!!!

Offline Global Angel

Re: மனித மனம்
« Reply #1 on: November 22, 2011, 02:29:15 PM »
unakkuthaan yenta kavalayum ilayeee. neetaan mutta vaangura aasamiyaachee.. ;D ;D
                    

Offline RemO

Re: மனித மனம்
« Reply #2 on: November 22, 2011, 05:44:52 PM »
ha ha ha