Author Topic: Some Tips for ur health  (Read 1699 times)

Offline RemO

Some Tips for ur health
« on: November 22, 2011, 09:41:10 AM »
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்லாரோக்கியத்துக்கான ரகசியமாகும்.

உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.

காலையிலும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன்,நாக்கை வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும்.

காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.

ஜலநேத்தி, சூத்ரநேர்த்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.

நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.

காலையில் பூண்டு ரசம் அருந்துங்கள்.

நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளவும். கோதுமை, அரிசி தவிடு நீங்காதது நல்லது. சீசனில் கிடைக்கும்  பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப்பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து  சாப்பிடவும்.

சாப்பாட்டிற்கு இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்போ, சாப்பிட்ட ஒரு மணிநேரம் கழித்தோ தண்ணீர் அருந்தவும். இதனால் ஜீரண சக்தி பாதிக்கப்படாது.

துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.

சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.

வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ,  பழச்சாறோ அருந்தவும்.

உங்கள் உடல் நிலையை கண்காணித்து வரவும்.

சோர்வு ஏற்படும் போது போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

டீ, காபி, பான், புகையிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொருள்களைத் தவிர்க்கவும்.

புகை பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இதனால் மனம் பேதலிப்பதுடன், பல தீராத நோய்களும் ஏற்பட்டு அவதியுற நேரிடும். பலனை எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக, சரியாகச் செய்யுங்கள். பலன் தருவது  இறைவன்.

பாதி வயிறு உணவு, பாதி அளவு தண்ணீர், மும்மடங்கு உடற்பயிற்சி, வாய்விட்டுச் சிரிப்பது, அதிக நேரம்  தியானப் பயிற்சி உங்களை முழு ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.

மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல  மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.

நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.

சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இரு ப்பதே சிறப்பு.

சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.

சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.

எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக்  கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும், அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வீர்களானால், உங்கள் வாழ்வில்  நிறைவு ஏற்படும்.

எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.

அன்றாடம் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

பசும்பால்  அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.

பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல்  நீக்காமல் பயன்படுத்தவும்.

40 வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. குறைத்துக்  கொள்வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு வகைகளைத் தவிர்க்கவும்.

முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக்கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.

தினசரி  சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.

கோரைப்பாயின் மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து உறங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைகள், தலையணைகள் வேண்டாம்.

பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை காலை உணவாகக் கொள்ளவும்.

அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு  மிகவும் உகந்தது.

Offline Global Angel

Re: Some Tips for ur health
« Reply #1 on: November 22, 2011, 01:41:05 PM »
:o ithellam yaaru pannuva  >:(
                    

Offline RemO

Re: Some Tips for ur health
« Reply #2 on: November 22, 2011, 06:04:30 PM »
nee than pananum

Offline micro diary

Re: Some Tips for ur health
« Reply #3 on: November 22, 2011, 06:54:13 PM »
உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.


 மச்சி  இதை  சொல்றதும் நீ தான்  நீ சொல்றதை எல்லாம் செய்த அதுக்கே நேரம் போதாதே  மத வேலைகளை யார் பார்க்கறது

Offline RemO

Re: Some Tips for ur health
« Reply #4 on: November 22, 2011, 07:45:17 PM »
ama mams:D ithelam padika than nalaruku
ana namakunu oruthi vantha nadaka chance iruku