Author Topic: ஃப்ரூட் பாயசம்  (Read 441 times)

Offline kanmani

ஃப்ரூட் பாயசம்
« on: December 24, 2013, 06:53:05 PM »
என்னென்ன தேவை?

ராகி சேமியா - 1 பாக்கெட்,
ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, பச்சை திராட்சை - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப்,
ஏதேனும் ஒரு பழ எசென்ஸ் - 1 சிட்டிகை,
பாதாம், முந்திரிக் கலவை - 10 கிராம்,
நெய் - சிறிது.
எப்படிச் செய்வது?

ராகி சேமியாவை லேசாக வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேக விடவும். ஆப்பிள், மாம்பழம், அன்னாசி பழங்களை துண்டுகளாக்கி  மிக்ஸியில் அரைத்து ராகி சேமியாவுடன் சேர்க்கவும். நன்கு கலந்து வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கலந்ததும் இறக்கும் முன்  எசென்ஸ் சேர்க்கவும். முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.