Author Topic: மிக்ஸட் ஃப்ரூட் புலாவ்  (Read 435 times)

Offline kanmani

மிக்ஸட் ஃப்ரூட் புலாவ்
« on: December 24, 2013, 06:51:54 PM »
என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி (அ) சீரக சம்பா அரிசி - 1 1/2 கப்,
ஆப்பிள், பச்சை, கருப்பு திராட்சை,
மாம்பழம், அன்னாசி பழங்கள் - 3/4 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது? 

பாசுமதி அரிசி (அ) சீரக சம்பா அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு மசாலா  பொருட்களையும் பச்சை மிளகாயையும் போட்டு நன்கு வதக்கவும். பழங்களை தோல், விதைகள் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதையும் சேர்த்து  நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி உப்பையும் போட்டு நன்கு கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.