« on: December 22, 2013, 07:47:48 PM »
கண்ணீருடன் கரைகின்ற நெஞ்சம்,
அருகினில் அன்று நீ இருக்க கொஞ்சம்,
அன்பால் அனைத்த உறவு இன்றியே,
தவிக்கிறது இன்று அதனை எண்ணியே....!
கண்ணில் மட்டும் வேர்கின்றதா..?
அடைமழையில் பூமியும் கண்ணீருடன்!
வாழ்க்கையது சொந்தங்கள் யாரும் இன்றி,
அன்பின் நினைவாலே மட்டும் நின்று,
உடைந்த நெஞ்சங்களை சேர்க்க நிலைத்துள்ளதோ...!
உன் நினைவுகள் இன்றி நான் வாழ்ந்த துன்பத்தின் நொடிகள் அனைத்தும்,
இன்று நான் வாழ்கின்ற நொடிகளாய் மாறிய வண்ணம் ஏனோ!
மனம் மட்டும் ஏனோ நினைவுகளை விட்டுசெல்ல மறுக்கிறதே..
உயிர் இன்னமும் உன்னை மட்டுமே எண்ணுகின்றதே...!
கனாவில் வாழ்ந்த துளிகள் எப்பொழுது உடையுமோ...
உண்மையில் அன்பால் அணைக்க போகும் நிமிடங்கள் மட்டும் தொடர்கிறதே..!
நீ வருவாய் என்றா உயிர் வாழ்ந்தேன்?
வந்தாய் அன்பே உன் நெஞ்சினில் வாழ்ந்தேன்...
இறுதியில் என்னை மட்டும் வீழ்த்தி சென்றாயே..,
அதனால் தானோ பிணமானேன்....!

« Last Edit: December 22, 2013, 07:50:11 PM by sameera »

Logged