என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 1/2கிலோ,
பொடித்த வெல்லம் - 1 கப்,
நெய்யில் வறுத்த முந்திரி - 10 (தூள் செய்தது),
திராட்சை - 10,
ஏலக்காய் தூள் சிறிது.
துருவிய தேங்காய் - 1 கப்,
நெய் 3 மேசைக் கரண்டி,
மரவள்ளிக் கிழங்கு வேகவைத்து துருவியது - 1 கப்.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை உதிர் உதிராக வேகவைத்து (© வேக்காடு) வடித்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், பொடித்த கடலைப்பருப்பைப் போட்டு நன்றாக வதக்கவும். அது உதிரி உதிரியாக வந்ததும் தேங்காய், ஏலக்காய் தூள், சுத்தமான பொடித்த வெல்லம், துருவிய மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வதக்கி புட்டு பதம் வந்ததும் திராட்சை, முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். அம்மனுக்கு புட்டு ரெடி. இதே போன்று மரவள்ளிக்கிழங்கு சேர்க்காமல் பாசிப்பருப்பிலும் செய்யலாம். அவல், அரிசி மாவிலும் செய்யலாம்.