Author Topic: ~ பயனுள்ள சமையல் குறிப்புகள்! ~  (Read 486 times)

Offline MysteRy

பயனுள்ள சமையல் குறிப்புகள்!


சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால்....,

சாம்பாரில் மிளகாய்த்தூள் காரம் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி சாம்பாரில் சேர்த்து கொதிக்க‍வைத்து எடுத்தால் மிதமான காரத்துடன் சாம்பார் தயார்.

உருளைகிழங்கு பொரியல் செய்யும்போது...,

உருளைகிழங்கு பொரியல் செய்யும்போது...
நறுக்கிய உருளைக்கிழங்கு கலவையுடன் இரண்டு தேக்கரண்டி ரவையை சேர்த்துக் கொள்ளவும். பொரியல் மிருதுவாக இருக்கும்.


சமையல் அறையில் எறும்பு தொல்லை நீங்க,

சமையல் அறை சிலாப்களை துடைக்க பயன்படுத்தும்
தண்ணீரில் சிறிதளவு வினீகர் கலந்திடுங்கள், எறும்பு தொல்லை
நீங்கும்


கீரை மசியல் கூடுதல் சுவை பெற..,

கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய
கீரை தனி சுவையுடன் இருக்கும்.


பூரி மொறு மொறு என இருக்க: ,

பூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்


காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்க,

கறிகளை பாலீதின் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா கவர்களில் கோணி ஊசி அல்லது கூரான ஆணி கொண்டு குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.


உளுத்தம் வடை சுவையாக : ,

உளுத்தம் வடை செய்யுமபோது சிறிது துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால் உளுத்தம் வடை சுவையாக இருக்கும்.


பாவக்காயில் கசப்பு தன்மை போக,

பாகற் காய்களை அரிசி பிசைந்த தண்ணீரீல் சிறிது நேரம் போட்டு வைத்தால் கசப்பு தன்மை குறையும்


முகம் பளபளப்பாக,

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


தயிர் புளிக்காமல் இருக்க,

தயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்