பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?    
பிரபஞ்சம்  எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளது. இன்னும் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே நான் என்ன புதிதாக சொல்ல போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் எனில் இங்கே அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல இந்த பாலத்தின் மூலம் எனக்கு தெரிந்த, நான் உணர்ந்த, பிரபஞ்ச ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன். 
முதலில் ஆன்மிகம்  மற்றும் அறிவியல்  என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்மிகம் என்பது நேற்றைய அறிவியல் அவ்வளவுதான்.
ஆன்மிகம் என்பது அகத்தாய்வு செய்தல்.  அறிவியல் என்பது புறத்தாய்வு செய்தல்.
இங்கே ஆன்மிகம் என்ற வார்த்தை கூட சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அகத்தாய்வு செய்தல் என்ற வார்த்தையை  இங்கே வைத்து கொள்வோம்.
அறிவியல் எனபது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். புறபொருள்களில் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது தான் அறிவியல். அதாவது  வெளியில் இருக்கும்  சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளி இங்கே  விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து  ஆராய்ச்சி செய்வார்கள்.(நிலம், கடல் இவையும் இந்த ஆராய்ச்சிக்கு உதவுகிறது)  இது அறிவியல் மூலமாக புறத்தாய்வு செய்து உலகம் எப்படி தோன்றியது என்ற முடிவுக்கு வருதல். 
அது என்ன அகத்தாய்வு? ஏன் அதை செய்ய வேண்டும்?
தவம் தியானம் இதைத்தான் அகத்தாய்வு  என்கிறோம்.  இங்கே நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். அறிவியலில் பார்வையை வெளியில் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.
அதாவது  உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம்  ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை  பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை  மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம். 
அட பிரபஞ்சம் என்பது வெளியில் தானே உள்ளது அதை அறிவியல் முறையில் வெளியில் ஆய்வு செய்வதுதானே சிறந்தது என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கேள்வி நியாமானது தான். ஆனால் அவர்களுக்கு உடலை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.
இந்த பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ  அது மனிதனின் உடலிலும்  உள்ளது.  இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும்.
வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் கூட நமது உடம்பில் உள்ளதாக மெய்ஞானிகள்   கூறுவர். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பது அவர்கள் கூற்று.
அகத்தாய்வு பற்றி படித்தவர்களுக்கு நன்று தெரியும் மனிதன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும் என்று.
ஒரு கடவுளால் எதுவெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களோ அதுவெல்லாம் மனிதனாலும் முடியும். (போலி சாமியார்களை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளதீர்கள்).
நீங்கள் என்ன நினைத்தாலும் அதை கூறும் சக்தியை ஒரு மனிதானால் பெற முடியும். நினைத்த நேரத்தில் ஓரிடத்தில் மழை பொழிய வைக்க முடியும். பறக்க முடியும், எங்கிருந்தும் எதையும் யாரையும் பார்க்க முடியும், உடலை  மலை போல் ஆக்க முடியும், உடலை அணு போலவும் மாற்ற முடியும், உயிரற்ற  உடலை தன்னுடலாக மாற்றிக்கொள்ள முடியும். (இவற்றை உண்மையான மெய் ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, இவையாவும் ஒரு கழிவுப்பொருள் போலத்தான்)  
பிரபஞ்சம் முழவதும் சுற்றி வரவும் முடியும்.   பிரபஞ்சத்தை சுற்றி வர தெரிந்தவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்று தெரியாதா என்ன. 
உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்களும் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம். விஞ்ஞானியாக அல்ல மெய்ஞானியாக