Author Topic: ~ பாப்கார்ன் சிக்கன் ~  (Read 391 times)

Offline MysteRy

~ பாப்கார்ன் சிக்கன் ~
« on: December 19, 2013, 04:49:28 PM »
பாப்கார்ன் சிக்கன்



தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ, ஆச்சி பஜ்ஜி - போண்டா மிக்ஸ் - 200 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
சிக்கனில் சிறிதளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்த சிக்கன் ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ஆச்சி பஜ்ஜி - போண்டா மிக்ஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்து... விருப்பப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும். இதை சாத்துக்கு சைட் டிஷ் ஆகவும், மாலைநேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.
பொரித்த பாப்கார்ன் சிக்கன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி சாப்பிட்டால்... சுவை அள்ளும்!