என்னென்ன தேவை?
அன்னாசிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்,
வெங்காயம் - 2,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
இஞ்சி - 1 துண்டு,
கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை - தாளிக்க,
மிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து வறுத்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து, நன்கு வதக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அன்னாசிப் பழத்தையும் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.