Author Topic: நவரத்ன குருமா  (Read 802 times)

Offline kanmani

நவரத்ன குருமா
« on: December 08, 2013, 09:46:03 PM »
என்னென்ன தேவை?

ஆப்பிள், மாம்பழம்,
பச்சை - கருப்பு திராட்சை,
கொய்யா, அன்னாசி,
பப்பாளி, மாதுளை, உருளைக்கிழங்கு - 2 கப்,
தேங்காய் பால் - 2 கப்,
வெங்காயம், தக்காளி - தலா 2 கப்,
இஞ்சி, பூண்டு விழுது தலா - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தலா - 2,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
முந்திரி விழுது - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது? 

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலாப் பொருள்களை போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து  நன்கு வதக்கவும். பழங்களின் தோல், விதை நீக்கி பொடியாக அரிந்து போட்டு, தோல் நீக்கி சின்ன துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கும் சேர்த்து  நன்கு வதக்கவும். உப்பு, நீர்விட்டு வேக விடவும். தேங்காய் பால், முந்திரி விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி  இறக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புலாவுக்கு ஏற்றது.