கடலைப்பருப்பு - அரை கிலோ
சீனி - அரை கிலோ + 2 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
மைதா மாவு - ஒன்றரை கப்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்புடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக வைத்து ஆறவைக்கவும். மைதா மாவுடன் இரண்டு தேக்கரண்டி சீனி, மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
கடலைப்பருப்பு ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். சீனியைப் பொடி செய்து கொள்ளவும், சீரகத்தை சிவக்க வறுத்து பொடி செய்யவும்.
பொடி செய்த கடலைப்பருப்புடன், பொடி செய்த சீனி, வறுத்த தேங்காய் துருவல், சீரகப்பொடி மற்றும் ஏலப்பொடி சேர்த்து பிசையவும்.
பிசைந்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்துப் பொரித்தெடுக்கவும்.
சுவையான சுசியம் தயார்.