கேரட் - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தயிர் - ஒரு கப்
தேங்காய் பால் - கால் கப்
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு
கேரட்டை மெல்லியதாக துருவி வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கேரட்டுடன் தயிர், மல்லித் தழை, மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
அதனுடன் தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்துவிடவும்.
பிரியாணிக்கு ஏற்ற சுவையான கேரட் ரைத்தா ரெடி. விரும்பினால் சிறிது மயோனைஸ் சேர்க்கலாம்.