Author Topic: செம்பருத்தி ஸ்குவாஹ்  (Read 409 times)

Offline kanmani

செம்பருத்தி ஸ்குவாஹ்
« on: December 07, 2013, 12:54:36 PM »
என்னென்ன தேவை?

செம்பருத்திப் பூ (சிவப்பு நிறப் பூ மட்டும்) - 20,
தண்ணீர் - அரை லிட்டர்,
சர்க்கரை - 2 கப்,
எலுமிச்சை - 1.
எப்படி செய்வது?

செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் தனியே எடுக்கவும். அவற்றை நன்கு கழுவி, அரை லிட்டர் வெந்நீரில் ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி, இதழ்களை எடுக்கவும். இப்போது அந்தத் தண்ணீர் சிவப்பாக மாறியிருக்கும். அந்தத் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து, கொப்புளங்கள் வரும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும். பிறகு எலுமிச்சையைச் சாறாகப் பிழிந்து சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த செம்பருத்தி ஸ்குவாஷ் இயல்பிலேயே நல்ல சிவந்த நிறத்தில் இருக்கும். அதனால் தனியே கலர் சேர்க்கத் தேவையில்லை. மூன்றில் ஒரு பங்கு ஸ்குவாஷ் உடன் குளிர்ந்த தண்ணீர் அல்லது சோடா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.  இந்த ஸ்குவாஷை ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்