Author Topic: ஆப்பிள் டீ  (Read 388 times)

Offline kanmani

ஆப்பிள் டீ
« on: December 07, 2013, 12:54:10 PM »
என்னென்ன தேவை?

ஆப்பிள் ஜூஸ் - அரை கப்,
டீ தூள் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - கால் கப்,
தேன் - 1 டீஸ்பூன்,
பட்டைத் தூள் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை,
ஆப்பிள் துண்டுகள் - சிறிது,
ஐஸ் கட்டிகள் - சிறிது.
எப்படிச் செய்வது?

கால் கப் தண்ணீரில் டீ தூள், பட்டைத்தூள், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அதை ஆறவிட்டு, வடிகட்டி,  டிகாக்ஷனை தனியே எடுக்கவும். அதை ஆப்பிள் ஜூஸ் உடன் கலக்கவும். தேன் சேர்த்து, ஆப்பிள் துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் அலங்கரித்துப்  பரிமாறவும்.