Author Topic: வெந்தயக் கீரை -சேப்பங்கிழங்கு குழம்பு  (Read 426 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

வெந்தயக் கீரை - 1 கட்டு,
சேப்பங்கிழங்கு - 100 கிராம்,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி - பூண்டு விழுது - சிறிது,
குழம்பு மிளகாய் தூள் - சிறிது,
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.

அரைப்பதற்கு:
தேங்காய்த் துருவல் - 2
டீஸ்பூன், சோம்பு, கசகசா - தலா கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - அரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது,  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு,  குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.