Author Topic: சேமியா பக்கோடா  (Read 450 times)

Offline kanmani

சேமியா பக்கோடா
« on: December 07, 2013, 12:52:15 PM »
என்னென்ன தேவை?

சேமியா - 100 கிராம்,
நீளமாக, மெலிதாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
சோம்பு - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
கடலை மாவு - 2 டீஸ்பூன்,
அரிசி மாவு - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

சேமியாவை தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயம் முதல் கறிவேப்பிலை வரையிலான பொருள்களைச் சேர்த்துப்  பிசறி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.