என்னென்ன தேவை?
அவல் - 2 கப், ஆப்பிள்,
திராட்சை, மாம்பழம்,
அன்னாசிப் பழத் துண்டுகள் - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.
எப்படி செய்வது?
அவலை வறுத்துப் பொடி செய்யவும். வெதுவெதுப்பான நீரில் உப்பைக் கலந்து, அவலில் தெளித்து 10 நிமிடம் பிசறி வைக்கவும். பழங்களைப் பொடியாக நறுக்கவும். புட்டுக் குழாயில் தேங்காய் துருவல் 1 லேயர், அடுத்து அவல், அடுத்து பழங்கள் சிறிதளவு, அடுத்து தேங்காய் துருவல் என மாறி மாறி நிரப்பி வேக வைக்கவும். வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து பரிமாறவும்.