சூப்பர் டேஸ்ட் ரவா கிச்சடி ரெசிபி!
தேவையானவை:
ரவை - ஒரு கப், தண்ணீர் - இரண்டேகால் கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - 2, தக்காளி - 3, மஞ்சள்தூள் - சிறிதளவு, பட்டை - ஒன்று, லவங்கம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ரவையை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், இஞ்சி - பூண்டு விழுதுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியாக மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறவும். பிறகு, அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், மணமும் சுவையும் நிறைந்த ரவா கிச்சடி ரெடி! விருப்பப்படுபவர்கள் இந்த கிச்சடியில் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்தும் சமைக்கலாம்.