Author Topic: முட்டைக்கறி  (Read 463 times)

Offline kanmani

முட்டைக்கறி
« on: November 29, 2013, 09:35:03 AM »


    முட்டை - 2
    வெங்காயம் - 3
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான் அளவு
    அரைக்க:
    தேங்காய் துண்டுகள் - 2 (பெரியது)
    முந்திரி - 8 (அ) 10
    பச்சை மிளகாய் - 2 (அ) 3
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    பொடிக்க:
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று
    தாளிக்க:
    பட்டை, சோம்பு, ஏலக்காய், இலவங்கம். பிரிஞ்சி இலை - தலா ஒன்று
    எண்ணெய்

 

 
   

முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
   

பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
   

தக்காளி வதங்கியதும் பொடி செய்த மசாலா, தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
   

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
   

அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
   

கொதித்ததும் வேக வைத்த முட்டை, தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
   

சுவையான முட்டைக்கறி தயார். இது பரோட்டா, இடியாப்பம், புட்டு போன்றவற்றிற்கு சரியான சைட் டிஷ்.

 

எலுமிச்சை சாறு குறிப்பிட்ட அளவே சேர்க்க வேன்டும். பச்சை மிளகாயின் எண்ணிக்கையை காரத்திற்கேற்ப கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். இது சமீபத்திய ஊட்டி பயணத்தின் போது ஒரு மலையாள உணவகத்தில் பரோட்டா மற்றும் புட்டுக்கு கொடுத்த சைட் டிஷ். மறக்க முடியாத சுவை.