Author Topic: ~ காஜு கத்திரிக்காய் கிரேவி ~  (Read 433 times)

Offline MysteRy

காஜு  கத்திரிக்காய் கிரேவி



தேவையானவை:
கத்திரிக்காய் - 4, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலைப் பொடி - 3 டீஸ்பூன், எள் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரி விழுது - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,

செய்முறை:
கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் தக்காளி - தேங்காய் துருவல் விழுதைப் போட்டுக் கிளறி, முந்திரி விழுது சேர்த்து... கொதித்ததும் எள் பொடி, வேர்க்கடலைப் பொடி தூவி கிளறி இறக்கவும். சூப்பர் சுவையில் காஜு - கத்திரி கிரேவி தயார்!