Author Topic: முட்டை கோஸ் - நெல்லிக்காய் துவையல்  (Read 525 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

நெல்லிக்காய் (துருவியது) - 4,
முட்டைகோஸ் (துருவியது) - அரை கப்,
பச்சை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சைச்சாறு - 1 துளி.
எப்படிச் செய்வது?

முட்டைகோஸை பொடியாக நறுக்கவும் அல்லது துருவவும். நெல்லிக்காயைத் துருவிக் கொள்ளவும். நெல்லிக்காய், முட்டைகோஸ், பச்சை மிளகாய்,  உப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும். இதில் புளிப்பு குறைவாக இருந்தால் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இந்தத் துவையலை இட்லி,  தோசை அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

* சருமத்துக்கு புத்துணர்ச்சி தருவதில் நெல்லிக்காயும் முட்டைகோஸும் முதல் இடம் வகிப்பவை. புது செல்களை உருவாக்குபவை.