Author Topic: ~ கோதுமை ரவை பொங்கல் ~  (Read 405 times)

Offline MysteRy

~ கோதுமை ரவை பொங்கல் ~
« on: November 21, 2013, 02:48:35 PM »
கோதுமை ரவை பொங்கல்



தேவையானவை:
கோதுமை ரவை – ஒரு கப்,
வேக வைத்த பாசிப்பருப்பு – கால் கப்,
மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) – அரை டேபிள் ஸ்பூன்,
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி – 8,
பட்டாணி – 1 டேபிள் ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்),
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

• அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

• இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு, சீரகம், மிளகு போட்டு வறுக்கவும். பிறகு, பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, இறக்கவும்.

• டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையில் இவ்வாறும் செய்து சாப்பிடலாம்.