Author Topic: வாழைப்பழ போண்டா  (Read 464 times)

Offline kanmani

வாழைப்பழ போண்டா
« on: November 20, 2013, 11:46:31 PM »


    பழுத்த வாழைப்பழம் - ஒன்று (பெரியது)
    சீனி - 4 தேக்கரண்டி
    மைதா - ஒரு கப்
    ரவை - ஒரு மேசைக்கரண்டி
    கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
    உப்பு - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - பொரிக்க

 

 
   

வாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
   

அதனுடன் மைதா, ரவை, கார்ன் ஃப்ளார், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
   

அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (ரவை மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்ப்பதால் இது அதிகமாக எண்ணெய் குடிக்காது).
   

எளிதில் செய்யக் கூடிய சுவையான வாழைப்பழ போண்டா தயார்.