மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மைதா மாவு - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
மரவள்ளிக்கிழங்கை துருவி தண்ணீரை பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
துருவிய கிழங்குடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மாலை நேர சிற்றுண்டியாக எளிதில் செய்யக் கூடிய சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். (சூடாகப் பரிமாறினால் தான் நன்றாக இருக்கும்).