Author Topic: ~ 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி! ~  (Read 2101 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பழம்  திராட்சை கஸ்டர்ட்



தேவையானவை:
வாழைப்பழம் - 3, காய்ந்த திராட்சை - 4 டீஸ் பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
 ஒரு கரண்டி பாலை மிதமாக சூடாக்கி, கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை சேர்த்துக் கலக்க வும். ஓரிரு நிமிடங்களில் குழம்புப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். இதனை ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவிடவும். வாழைப்பழத்தை நறுக்க வும். ஃப்ரிட்ஜில் இருந்து பால் கல வையை எடுத்து அதில் வாழைப்பழம். காய்ந்த திராட்சை சேர்த்துக் கலக்கவும். குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

குறிப்பு:
இது மலச்சிக்கலுக்கு கை கண்ட மருந்து. மலச்சிக்கல் உள்ள போது இதனை அருந்தினால்... உட னடி நிவாரணம் கிடைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பழம்  பேரீச்சம்பழம் பாயசம்



தேவையானவை:
வாழைப்பழம் - 6, பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - அரை கப், வெல்லம் - 100 கிராம், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன்.

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து, வடிகட்டவும். அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு பாகு வைக்கவும். மில்க்மெய்டை அதில் ஊற்றி, இரண்டுமாகச் சேர்ந்து வந்ததும், முதலில் நறுக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து, பிறகு வாழைப் பழத்தையும் சேர்த்து இறக்கவும் (ஒரு கொதி  வந்தாலே போதும். பழங்கள் சூட்டிலேயே வெந்து விடும்). இந்த வாழைப்பழ - பேரீச்சை பாயசத்தை விரும்பாத வர்கள் மிகவும் அரிது.

குறிப்பு:
இது, மலச்சிக்கலை யும் நீக்கும்... ரத்த விருத்திக்கும் உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுரைக்காய் மோர்க்குழம்பு



தேவையானவை:
 நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கெட்டி மோர் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, சீரகம் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சுரைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைவேக்காடு பதத்துக்கு வேக வைத்து எடுக்கவும். கெட்டி மோரில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கி... உப்பு, சர்க்கரை, அரை டம்ளர் நீர் சேர்த்து அடிபிடிக்காமல் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த சுரைக்காயையும் சேர்த்து நுரை பொங்கி வந்ததும் இறக்கி... தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்பு:
இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... உடல் இளைக்கும். சுரைக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுரைக்காய் சப்ஜி



தேவையானவை:
சிறிய சதுரங்களாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3 டீஸ்பூன், நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - பூண்டு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெந்தயக் கீரை - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை:
கடலைப்பருப்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து குழைந்து விடாதவாறு வேகவிட்டு, தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து... அரை டம்ளர் நீர் விட்டு, சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும், முக்கால் பதத்துக்கு வெந்ததும் வெந்தயக்கீரை, வேக வைத்த கடலைப்பருப்பை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:
இது, உடலை உடல் பருமனைக் குறைப்பது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாகற்காய் ரசம்



தேவையானவை:
நீட்டு பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - கொட்டைப்பாக்கு அளவு, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, வெந்தயம்  - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு. 

செய்முறை:
பாகற்காயை நீள வாக்கில் நறுக்கி... உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும். பாகற்காய் வெந்து, புளிக் கரைசல் ரசம் பதம் வந்ததும்... தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்து சேர்த்து இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவ வும். பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்க வேண்டும் என்றால், இதனை கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்கலாம். இதை சாதத்துக்கு ரசமாகவும் பயன்படுத்தலாம்.

குறிப்பு:
இது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அருந்த வேண்டிய கைகண்ட மருந்து.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேர்க்கடலை  தேங்காய்  எள் பொடி



தேவையானவை:
வறுத்து, தோல் உரித்த வேர்க்கடலை - ஒரு கப், துரு விய தேங்காய் - கால் கப், வறுத்த எள் - 4 டீஸ்பூன்,  முந்திரிப் பருப்பு - 5, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண் ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுக்கவும். தேங்காயை வறுத்து இதனுடன் சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பின்னர், வேர்க்கடலை, எள் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். முந்திரியை வறுத்து துண்டுகளாக்கி சேர்த்து... நன்றாக கலந்துவிடவும். இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
உதிர் உதிராக வடித்த சாதத்துடன் தேவையான பொடி சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

குறிப்பு:
உடல் இளைத்தவர்கள் இந்தப் பொடியைத் தினசரி பயன் படுத்தினால், உடல் பருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பூ  முருங்கைக்கீரை துவட்டல்



தேவையானவை:
சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப், சுத்தம் செய்த முருங்கைக்கீரை - அரை கப், மோர்  - ஒரு கரண்டி,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுந்து, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைப்பூவை பொடியாக நறுக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, தக்காளி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். பிறகு, முருங்கைக் கீரையையும் சேர்க்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாமாகச் சேர்ந்து வதங்கியதும் இறக்கவும்.

குறிப்பு:
இது... கர்ப்பப்பை பலம் பெறவும், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கவும் உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைத்தண்டு கூட்டு



தேவையானவை:
வாழைத்தண்டு - 2 துண்டுகள், பயத்தம்பருப்பு - 6 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கெட்டி மோர் - ஒரு கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: தேங்காய் துரு வல் - 6 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ் பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:
பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். வாழைத் தண்டை நார் எடுத்து, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும், வேக வைத்த பயத்தம்பருப்பை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அதில் சேர்த்து, எல்லா மாகச் சேர்ந்து கூட்டுப் பதம் வந்த தும் இறக்கிவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு:
இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... சிறுநீரகக் கற்கள் கரையும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைத்தண்டு  முள்ளங்கி சாம்பார்



தேவையானவை:
வாழைத்தண்டு - ஒரு துண்டு, துவரம்பருப்பு - 50 கிராம், முள்ளங்கி - 2, சின்ன வெங் காயம் - 4, மஞ்சள்தூள்- சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய கொத்த மல்லித் தழை - 2 டீஸ்பூன், எண் ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
துவரம்பருப்பை குழைய வேகவிடவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், சாம் பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாழைத்தண்டை நார் நீக்கி வில்லை களாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பாதி வெந்ததும், நறுக்கிய முள்ளங்கியையும், சின்ன வெங்காயத் தையும் வதக்கி சேர்க்கவும். காய்கள் வெந்ததும், வெந்த துவரம்பருப்பை சேர்த்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத் துள்ளவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்த்து... கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பூ பஜ்ஜி



தேவையானவை:
சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப்பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்). எண்ணெய் - தேவையான அளவு.
கரைத்துக் கொள்ள: கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை, இட்லி மாவு - 3 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கரைத்துக் கொள்ளக் கொடுத்தவற்றை நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத் துக்குக் கரைத்துக் கொள்ள வும். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு வாழைப்பூவாக மாவில் முக்கி எடுத்து, பொரித் தெடுக்கவும்.

குறிப்பு:
இட்லி மாவுக் குப் பதில் 2 டீஸ்பூன் காய்ந்த உளுத்தமாவையும் சேர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிதி பாகற்காய் மசாலா



தேவையானவை:
மிதி பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம், புளி - கொட்டைப் பாக்கு அளவு, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: உரித்த சின்ன வெங்காயம் - 10, உரித்த பூண்டு - 10 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3.
வதக்கிக் கொள்ள: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, மிதி பாகற்காயையும் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்தில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை வதக்கி, அரைத்த விழுது, பாகற்காய் கலவையை சேர்க்கவும். பிறகு, சிறிதளவு உப்பு போட்டு, எல்லாமாகச் சேர்ந்து கொதி வந்ததும், இறக்கி... கொத்தமல்லித் தழையை தூவவும். இது, காக்ரகாய மசாலா என்ற பெயரில் ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிஷ் ஆகும்.

குறிப்பு:
 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முடக்கத்தான் கீரை தோசை



தேவையானவை:
சுத்தம் செய்து, நறுக்கிய  முடக்கத்தான் கீரை - 2 கப், புழுங்கல் அரிசி - ஒரு  கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றுசேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு தொட்டு சாப்பிட ஏற்றது .

குறிப்பு:
'முடக்கு அறுத்தான்’ என்பதுதான் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட... கை, கால், மூட்டு வலி குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கத்திரிக்காய் மசாலா பொரியல்



தேவையானவை:
பிஞ்சு கத்திரிக் காய் - கால் கிலோ, பெரிய வெங் காயம் - 2, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கி... கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, சிறிதளவு நீர் விட்டு காய் குழைந்துவிடாமல் வேகவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:
கோடைக்காலத்தில் அம்மை நோய் வராமல் இருக்க இளம் வயதினர் அவசியம் சாப்பிட வேண்டிய பொரியல் இது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அல்லம் பச்சடி



தேவையானவை:
நறுக்கிய இஞ்சி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, புளி, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல் லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: வெந்த யம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்தவற்றை வறுத்துப் பொடிக்க வும். இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை புளியுடன் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்ததையும், பொடித்ததையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுத்தால்... அல்லம் பச்சடி தயார்.

குறிப்பு:
இதனைச் சாப்பிட்டால்... நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு ஆகியவை குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜிஞ்சர் புலாவ்



தேவையானவை:
துருவிய இஞ்சி - 10 டீஸ்பூன், பாசுமதி அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் (அ) நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை:
பாசுமதி அரிசியை ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் நெய் (அ) எண்ணெய் விட்டு, துருவிய இஞ்சியை வதக்கி, சீரகம் சேர்த்துக் கலந்து, வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்தால்... ஜிஞ்சர் புலாவ் தயார்.

குறிப்பு:
பசியெடுக்கவும், சாப்பிட்ட உணவு செரிக்கவும் இஞ்சி கைகொடுக்கும்.