Author Topic: சீதாப்பழ பர்பி  (Read 414 times)

Offline kanmani

சீதாப்பழ பர்பி
« on: November 19, 2013, 11:19:45 PM »
என்னென்ன தேவை?

சீதாப்பழம் - 4,
தேங்காய் துருவல் - 1 கப்,
முந்திரி - 50 கிராம்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - சிறிதளவு.


எப்படிச் செய்வது? 

சீதாப்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சர்க்கரையை கம்பிப்  பதத்துக்குக் காய்ச்சி, அதில் கலவையை கொட்டி நெய் விட்டு கிண்டவும். சுருள வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.