Author Topic: ~ சோயா கிரானுல்ஸ் கட்லெட் ~  (Read 366 times)

Offline MysteRy

சோயா கிரானுல்ஸ் கட்லெட்




தேவையானவை
சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2,  சீஸ் - சிறிதளவு (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பிரெட் ஸ்லைஸ் - 4, மைதா - 4 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
சோயா கிரானுல்ஸை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு பிழிந்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நன்கு பிழிந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். மைதாவுடன் சிறிதளவு நீர் சேர்த்து சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸ்களை நீரில் நனைத்துப் பிழிந்து, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், சோயா கிரானுல்ஸ். அரைத்த பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி, விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். இதனை மைதா கரைசலில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
குழந்தைகளை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த கட்லெட்!