ஏங்குகிறேன்..!!
என்னை இம்சிக்கும் உன் இனிய நினைவுகளால்..
சிநேகிதியாய்..
உன்னோடு நான் சிரித்து விளையாடிய தித்திக்கும் நிமிடங்களை..
இன்று..
தனிமையில்.. மாலையில் சிவக்கும் செவ்வானம் பார்த்து
நினைவில் வைத்து சிரிகின்றேன்..
தோழியாய்,,
உன்னோடு நான் சென்ற இடங்களில் உள்ள மரங்கள் எல்லாம்..
இன்று..
உன்னவளாய் உன் தோள் சாய்ந்து..
நான் வர ஏங்குகின்றன..
இலையுதிர்க் காலமாய்..
உன் கண்கள் பார்த்து என் கண்கள் பேச நினைக்கும்..
காதல் வார்த்தைகளை எல்லாம்..
உன்னை கண்டதும்..
என் கண்கள் வெட்கத்தால் இமைகளுக்கும் புதைகின்றன..
கவிதையில் உணர்த்த முடியாத உணர்வு ஏதும் இல்லை..
என் காதலை என் வார்த்தைகள் உனக்கு உணர்த்துமோ.? என்னவோ.?
விழிகள் நிறைய கனவுகளோடு..!
நெஞ்சம் நிறைய காதலோடு..!
உன்னில் தொலைந்த என் இதயத்தின் ஏக்கத் துடிப்போடு..!
என் கவிதையில் என் காதலி வரைந்திருக்கிறேன்..
உனக்கு உணர்த்த..!!
இமைபொழுதும் நான் உன்னை பிரிதிடாத வரம் வேணுமடா..!!
உன்னில் பாதியை நான் வாழ வேணுமடா..!!
நீ மறுப்பாயானால்..??!!
உன் ஒரே ஒரு அணைப்பில்..!!
என் உயிர் புதையட்டும்..
உன் நெஞ்சத்தில்..!!!
....By..,
..PinkY..