Author Topic: மிலி ஜுலி சப்ஜி  (Read 572 times)

Offline kanmani

மிலி ஜுலி சப்ஜி
« on: November 13, 2013, 10:35:53 AM »
என்னென்ன தேவை?
 
பேபி கார்ன் - 100 கிராம்,
பச்சைப் பட்டாணி - 100 கிராம்,
கேரட் - 2 பெரியது (நறுக்கியது),
பீன்ஸ் - 10,
சின்ன தக்காளி - 10,
இளம் கோஸ் - பெரிய துண்டுகளாக சிறிது,
பேபி குடமிளகாய் -1,
பேபி உருளைக் கிழங்கு - 6,
பச்சை மிளகாய் - 2.
1. பேஸ்ட் செய்வதற்கு... (விழுது) 2 லவங்கம்,
2 ஏலக்காய், 1 பெரிய வெங்காயம்.
2. பேஸ்ட் செய்வதற்கு...  (விழுது) 2 தக்காளி, 
தயிர் - கால் கப்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்.
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது? 

பேபி கார்னை பாதியாக நீளவாக்கில் வெட்டி மத்தியில் இருக்கும் காம்பை எடுக்கவும். கேரட்டை கால் துண்டுகளாக வெட்டவும். பீன்ஸ், கோஸ் சிறிது பெரிய துண்டுகளாக வெட்டவும். பேபி குடமிளகாய் கிடைத்தால் அப்படியே முழுமையாக போடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, பல் குத்தும் குச்சியால் குத்தி வைக்கவும். நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு முதல் பேஸ்ட்டை போட்டு வாசனை வரும்வரை வதக்கி பின் இரண்டாவது பேஸ்ட்டை போட்டு அதையும் வதக்கி, காய்கறிகள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த் தூள்  சேர்த்து மிதமான தீயில் தண் ணீர் தெளித்து கொதித்து நன்றாக வேகவிட்டு இறக்கவும். பிறகு கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும்.