Author Topic: இஞ்சி -துளசி டீ  (Read 468 times)

Offline kanmani

இஞ்சி -துளசி டீ
« on: November 13, 2013, 10:33:56 AM »
இஞ்சி -துளசி டீ


என்னென்ன தேவை?

டீத்தூள் - 4 டீஸ்பூன்,
தண்ணீர் 4 கப் (அ) 5 கப்,
2 - எலுமிச்சைப் பழச்சாறு,
கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப,
தேன் - 6 (அ) 8 டீஸ்பூன்,
இஞ்சி சாறு - சிறிது,
துளசி - 5 இலைகள்.

எப்படிச் செய்வது? 

ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சி சாறு, துளசியை சேர்க்கவும். உடனே ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும். பால் இல்லாத இந்த டீ மிகமிக சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.

குறிப்பு: கறுப்பு உப்பு பெரிய கடையில் கிடைக்கும்.