வலக்கையை பிடித்து
வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து
வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை
என் முதல் வரிமுதல்
முழுவதும் பிழை
விழிகளின் வழி
விழுந்தது மழை
எல்லாம் உன்னால் தான்
இதுவா உந்தன் நியாங்கள்
எனக்கேன் இந்த காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ!!!!