Author Topic: 30 வகை பிரெட் சமையல்  (Read 1815 times)

Offline kanmani

30 வகை பிரெட் சமையல்
« on: November 12, 2013, 02:24:34 PM »
1. பிரெட் காரப்பணியாரம்

 தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #1 on: November 12, 2013, 02:24:58 PM »

2. புலாவ் வித் பிரெட்
 
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #2 on: November 12, 2013, 02:25:20 PM »

 3.பிரெட் பாயசம்
 தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #3 on: November 12, 2013, 02:25:38 PM »
 4.பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1,  முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல்,  நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #4 on: November 12, 2013, 02:26:11 PM »

5. பிரெட் போண்டா

 தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #5 on: November 12, 2013, 02:26:34 PM »

6.  பிரெட் வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #6 on: November 12, 2013, 02:26:54 PM »

7. பிரெட் பூரண போளி

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #7 on: November 12, 2013, 02:27:38 PM »

8. பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.


Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #8 on: November 12, 2013, 02:28:08 PM »

9. கல்கத்தா ஜீரா

 தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!


Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #9 on: November 12, 2013, 02:28:27 PM »
10.பிரெட் சமோசா

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #10 on: November 12, 2013, 02:28:55 PM »

11.  பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டை நான்கு துண்டுகளாக 'கட்’ செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளைத் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #11 on: November 12, 2013, 02:29:17 PM »

12. பிரெட் அல்வா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, சர்க்கரை - 100 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சிறிது கெட்டியானதும் பிரெட் பொடியை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு மேலும் கிளறி இறக்கவும்.

பால் மற்றும் பிரெட் இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவையை உண்டாக்கும் அல்வா இது.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #12 on: November 12, 2013, 02:29:38 PM »

13.பிரெட் அடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, இட்அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும்போது இரண்டு பூண்டுப் பல் சேர்க் கலாம்.

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #13 on: November 12, 2013, 02:29:57 PM »

14.  பிரெட் ஸ்பிரிங் ரோல்

 தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸுடன் சாப்பிட ஸ்பிரிங் ரோல்... சூப்பர் ரோல்!

Offline kanmani

Re: 30 வகை பிரெட் சமையல்
« Reply #14 on: November 12, 2013, 02:30:20 PM »
15. பிரெட் வடை

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.